• ஆசிரியர் – ரிஷாட் நஜிமுத்தீன்
  • பக்கங்கள் – 32

ஜாஸிர் அவ்தா மகாசித் சிந்தனையை வலியுறுததிப் பேசும் நவீனகால முஸ்லிம் அறிஞர்களுள் முக்கியமானவர். மகாசிதுஷ் ஷரீஆ பற்றிய அவரது புத்தகங்களுக்கு தனியான இடம் உள்ளது. எனினும், ஏற்கனவே எழுதிய புத்தகங்களை விட இன்று அறிமுகப்படுத்த முனையும் புத்தகம் இன்னும் விரிவான தளம் ஒன்றை நோக்கி நகர்ந்திருக்கிறது. சுருக்கமாகக் கூறுவதாக இருந்தால், ஏற்கனவே எழுதப்பட்ட புத்தகங்கள் மிகப் nஎபனருதும்பாடலுயமர் p இஸ்லாத்தின் கிளையம்சங்களை மகாசிதோடு தொடர்புபடுத்துவதாக உள்ள மாற்றமாக, இப்புத்தகம் மகாசிதை “முஸ்லிம் சமூகத்தின் முழுமையானதொரு உள்ளக சீர்திருத்தம்” ஒன்றுக்கான அடித்தளமாக அறிமுகப்படுத்துகிறது. அதே நேரம், குறிப்பிட்ட சீர்திருத்தம் ஒட்டுமொத்த மனித சமூகத்துக்குமான சீர்திருத்தமாகவும் பங்களிப்பாகவும் அமையும் என்பதும் அவரது நம்பிக்கை.

பேராசிரியர் ஜாசிர் அவ்தாவுடைய “Re-envisioning Islamic Scholarship- Maqasid methodology as a new approach” எனும் للإجتهاد الإسلامي புத்தகம் (அரபுமொழியில் இதன் தலைப்பு )என்றமைகிறது المنهجية المقاصدية نحو إعادة صياغة معاصرة முன்னுரையுடன் ஆரம்பித்து, அறிமுகக் குறிப்பு, நவீன இஜ்திஹாத் முறைமைகளது சிக்கல்கள், மகாசித் ஆய்வுமுறைமைக்கான அடிப்படைகள், இஜ்திஹாதுக்குரிய ஐந்து எட்டுக்கள், கோட்பாட்டுரு வாக்கத்துக்கான ஏழு அம்சங்கள் அவற்றைக் காணும் முறைமைகள், இஸ்லாமிய கற்கைகளுக்கான பரிந்துரைக்கப்படும் ஒழுங்கு ஆகிய ஆறு பிரதான தலைப்புக்களை உள்ளடக்கியிருக்கிறது.

புத்தகத்தின் கருத்துக்களை இக்கட்டுரை சுருக்கித் தருகிறது. நவீன இஸ்லாமிய சிந்தனையில், மகாசித் சிந்தனையில், சமூக சீர்திருத்த முறைமையில் புதிய ஒளியை பாய்ச்சும் இப்புத்தகம் மிக விரிந்த தளத்தில் வாசிக்கப்பட வேண்டும், கலந்துரையாடப்பட வேண்டும் என்பதே எமது அவா.

Share.
Leave A Reply

Exit mobile version