Browsing: eBooks

தாரிக் ரமழான் மமற்குலகில் முஸ்லிம்களிடத்தில் மட்டுமல்லாது சகோதர சமூகத்தவர்கள் மத்தியிலும் செல்வாக்கு பெற்றவர். எவ்வித இஸ்லாமிய இயக்கங்களிலும் அங்கத்துவம் பெறாவிட்டாலும் கூட அவருக்கென்று தனியான சிந்தனை வட்டமொன்றை உருவாக்கியிருக்கிறார். அவர் பங்கு பற்றிய கலந்துரையாடல்கள் அவரது புத்தகங்கள் மிகப் பெரும் வரவேற்பை பெற்றன. அவரது புத்தகங்களுள் மிக முக்கிய புத்தகமான ‘சரடிகல் ரிமொம்’ புத்தகம் முஸ்லிம் சமூகத்தினுள் நடைபெற வேண்டிய  சீர்திருத்தம்  பற்றிப் பேசுகிறது.சீர்திருத்தம் ‘உஸூல் அல்-பிக்ஹ்’ மீதான மீள்வாசிப்பிலிருந்து ஆரம்பிக்க  வேண்டும் என வாதாடுகிறார். இப்புத்தகம் சீர்திருத்தம், உஸூல் அல்-பிக்ஹ், மகாசிதுஷ் ஷரீஆ, சூழல் ஒரு சட்ட மூலாதாரம், மார்க்க அதிகாரம் (Religious Authority) மொன்ற மிக முக்கிய தனலப்புக்கனை உள்ளடக்கியதாக உள்ளது. இப்புத்தகத்தின் சுருக்கத்தை இங்கு தருகிறோம். ஆசிரியர் – ரிஷாட் நஜிமுத்தீன் பக்கங்கள் – 51

Read More

ஆசிரியர் – ரிஷாட் நஜிமுத்தீன்பக்கங்கள் – 32ஜாஸிர் அவ்தா மகாசித் சிந்தனையை வலியுறுததிப் பேசும் நவீனகால முஸ்லிம் அறிஞர்களுள் முக்கியமானவர். மகாசிதுஷ் ஷரீஆ பற்றிய அவரது புத்தகங்களுக்கு தனியான இடம் உள்ளது. எனினும், ஏற்கனவே எழுதிய புத்தகங்களை விட இன்று அறிமுகப்படுத்த முனையும் புத்தகம் இன்னும் விரிவான தளம் ஒன்றை நோக்கி நகர்ந்திருக்கிறது. சுருக்கமாகக் கூறுவதாக இருந்தால், ஏற்கனவே எழுதப்பட்ட புத்தகங்கள் மிகப் nஎபனருதும்பாடலுயமர் p இஸ்லாத்தின் கிளையம்சங்களை மகாசிதோடு தொடர்புபடுத்துவதாக உள்ள மாற்றமாக, இப்புத்தகம் மகாசிதை “முஸ்லிம் சமூகத்தின் முழுமையானதொரு உள்ளக சீர்திருத்தம்” ஒன்றுக்கான அடித்தளமாக அறிமுகப்படுத்துகிறது. அதே நேரம், குறிப்பிட்ட சீர்திருத்தம் ஒட்டுமொத்த மனித சமூகத்துக்குமான சீர்திருத்தமாகவும் பங்களிப்பாகவும் அமையும் என்பதும் அவரது நம்பிக்கை.பேராசிரியர் ஜாசிர் அவ்தாவுடைய “Re-envisioning Islamic Scholarship- Maqasid methodology as a new approach” எனும் للإجتهاد الإسلامي புத்தகம் (அரபுமொழியில் இதன் தலைப்பு )என்றமைகிறது المنهجية المقاصدية نحو إعادة صياغة…

Read More

இன்றைய உலக ஒழுங்கு பன்மைத்துவ மத, இன  கட்டமைப்பைக் கொண்டுள்ளது. மூன்றாம் உலக நாடுகளில் மட்டுமல்லாது வளர்ச்சியடைந்த நாடுகளிலும் இவ்வுண்மையை அவதானிக்கலாம். நாடுகளது அபிவருத்திக்கும் வளர்ச்சிக்கும் நேர்மறையாக பயன்படுத்தப்பட வேண்டிய இப்பன்மைத்துவ கட்டமைப்பு இன்று அதிகார வர்க்கத்திரனால் தனது நலனை ஈட்டிக்கொள்வதற்காக மாத்திரம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு எதிர்மறையாக பயன்படுத்தப்படுகிறது.  இனவாதமும் இனவன்முறையும் இனத்துவேசமும் மிகக் கச்சிதமாக அரங்கேற்றப்படுகின்றன. இவ்வகை சிக்கலுக்கு தீர்வு தேட ஒரு முஸ்லிம் எவ்வாறு தனது முன்மாதிரியான இறைத்தூதரது (ஸல்) வாழ்வை மீள்வாசிக்க முடியும் என்ற கேள்விக்கு விடை காணை இவ்வாய்வு முனைகிறது. இரண்டாம் நிலைத் தரவுகளை மையப்படுத்தி இவ்வாய்வு வரையப்பட்டது. இறைத்தூதர் தனக்கு அதிகாரம் கிடைக்காத் போதும் அதிகாரம் வாயத்த போதும் சமூகங்களுக்கிடையில் பிளவுகளையோ பிரச்சினைகளையோ ஏற்படுத்தாது அவற்றுக்கு மத்தியில் நல்லுறவை கட்டியெலுப்புவதில் முனைப்புடன் செயற்பட்டார்கள் என்பதுடன் சமூகங்களுக்கு மத்தியில் நல்லுறவை கட்டியெலுப்புவதற்கான அடிப்படை விதிகளையும் முன்வைத்தார் என ஆய்வின் முடிவு கூறுகிறது. அவர் முன்வைத்த அவ்வடிப்படை விதிகளை…

Read More

ஆசிரியர் – ரிஷாட் நஜிமுத்தீன்பக்கங்கள் – 45அல்குர்ஆன் வசனங்கள் மறுமை வரை எவ்வித மாற்றங்களுக்கோ திரிபுகளுக்கோ உட்படாமல் பாதுகாக்கப்படும் என்பது எமது திடமான நம்பிக்கை. எனினும் அவ் வசனங்களை புரிந்து கொள்ளும் விதமும் புரிதல்களை பிரயோகிக்கும் முறைமையும் காலத்துக்குக்காலம் வித்தியாசப்பட்டு அமையும் எனவும் நம்புகிறோம். மனித அறிவு மற்றும் சமூக நிலைமை ஆகிய இரண்டும் வித்தியாசப்பட்ட புரிதல்களை கொண்டு வருகின்றன. அவ்வகையில் நவீன சூழலுக்கு ஏற்ப அல்குர்ஆனை அணுகிய முறை சற்று வித்தியாசமானது. ஆயத் ஆயத்தாக குர்ஆனை விளங்க முற்படுவது அன்றிலிருந்து பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய முறை. ஒவ்வொரு சூராக்களையும் அவை கொண்டிருக்கும் மையக் கருத்துடன் தொடர்புபடுத்தி சூராவின் மொத்த வசனங்களையும் புரிந்து கொள்ள முற்படும் விதம் இன்னொரு வகை. முழுக் குர்ஆனும் என்ன கூற வருகின்றது? அது எங்களை எங்கு அழைத்துச் செல்கின்றது? அது அடைய விரும்பும் இலக்குகள் யாவை? போன்ற கேள்விகள் நவீன காலத்தில் குர்ஆனை அணுகும் முறையில்…

Read More