அல் குர்ஆனின் இலக்குகள்
மனித அறிவு மற்றும் சமூக நிலைமை ஆகிய இரண்டும் வித்தியாசப்பட்ட புரிதல்களை கொண்டு வருகின்றன. அவ்வகையில் நவீன சூழலுக்கு ஏற்ப அல்குர்ஆனை அணுகிய முறை சற்று வித்தியாசமானது. ஆயத் ஆயத்தாக குர்ஆனை விளங்க முற்படுவது அன்றிலிருந்து பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய முறை. ஒவ்வொரு சூராக்களையும் அவை கொண்டிருக்கும் மையக் கருத்துடன் தொடர்புபடுத்தி சூராவின் மொத்த வசனங்களையும் புரிந்து கொள்ள முற்படும் விதம் இன்னொரு வகை. முழுக் குர்ஆனும் என்ன கூற வருகின்றது? அது எங்களை எங்கு அழைத்துச் செல்கின்றது? அது அடைய விரும்பும் இலக்குகள் யாவை? போன்ற கேள்விகள் நவீன காலத்தில் குர்ஆனை அணுகும் முறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இப்பின்னணியில்தான் “மகாசிதுல் குர்ஆன்” (அல்குர்ஆனின் இலக்குகள்) எனும் ஆய்வு முறைமை தோற்றம் பெறுகிறது.
இச்சிறிய புத்தகம் ஷெய்க் கர்ழாவி அடையாளப்படுத்திய இலக்குகளை எடுத்து எமது நாட்டு சமூக சூழலை கருத்தில் கொண்டு எழுதப்படுகிறது என்பதை கருத்தில் கொள்க.
- ஆசிரியர் – ரிஷாட் நஜிமுத்தீன்
- பக்கங்கள் – 45