உஸ்மானிய சாம்ராஜ்யம் வீழ்ச்சியுற ஆரம்பிக்கும் காலகட்டத்திலேயே மேற்கத்தேயநவீனத்துவம் அவ்விடத்தை பிடிக்க ஆரம்பிக்கிறது. அன்றிலிருந்து இன்று வரை நவீனத்துவம்பல கட்டங்களையும் கடந்து இன்றிருக்கும் உலக ஒழுங்குக்கு வந்து சேர்ந்திருக்கிறது. இவ்வரலற்றுக் காலகட்டம் மீதான வாசிப்புக்கள் முஸ்லிம், முஸ்லிமல்லாத அறிஞர்களால்முன்வைக்கப்பட்டு வந்திருக்கின்றன. முஸ்லிம் அறிவுசார் உரையாடல்களில் சில மேற்கத்தேயநவீனத்துவத்தை முழுமையாக விழுங்கிக் கொண்டன. அதனைப் பின்பற்றுவதனூடாகவேவிமோசனம் சாத்தியமானது என்ற வாதத்தை அவை முன்வைத்தன. இன்னும் சிலஉரையாடல்கள் இஸ்லாம் மேற்குடன் முரன்படும் பகுதிகள் இருப்பது போல உரையாடமுடியுமான பகுதிகளும் இருக்கின்றன, மேற்கையும் கிழக்கையும் இணைக்கும் பாலம்உருவாக்கப்பட வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்தன. மூன்றாம் தரப்பு, நவீனத்துவம்அடிப்படையில் பிழையானது, அதனூள் பல வகையான சிக்கல்கள் இருக்கின்றன, பிரதியீடாகஇன்னொரு நவீனத்துவம் முன்வைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தது. இத்தரப்பைச் சார்ந்த மிக முக்கிய ஒருவர்தான் மொரோக்கோ நாட்டு மெய்யியல்துறை அறிஞர்பேராசிரியர் தாஹா அப்துர் ரஹ்மான். பேராசிரியர் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகக்குறிப்பையும் மேற்கத்தேய நவீனத்துவம் மீதான அவரது விமர்சனத்தின் ஒரு பகுதியையும்இங்கே தருகிறோம்..
தாஹா அப்துர் ரஹ்மான் ஓர் அறிமுகம்
தாஹா அப்துர் ரஹ்மான் மொரோக்கோவைச் சேர்ந்தவர். ஆரம்பக் கல்வியைமொரோக்கொவிலும் பீஎச்டீ யை பிரான்ஸ் சேர்பர்ன் பல்கலைக்கழகத்திலும்பூரணப்படுத்தினார். பின் மெய்யியல் துறையில் விரிவுரையாளராக பணியாற்றினார். இக்காலப்பிரிவில் அவரோடு பணியாற்றியவர்கள் என்ற வகையில் ஆபித் ஜாபிரி மற்றும்அப்துல்லாஹ் லாரவ் ஆகிய இருவரும் முக்கியம் பெறுகின்றனர். தாஹா இவ்விருவரதும்கருத்துக்களோடு நேரடியாக முரன்படக் கூடியவராக இருந்தார். உதாரணமாக ஆபித் ஜாபிரிதனது சிந்தனையின் முன்னோடியாக இப்னு ருஷ்தைக் கொண்டாட, கிரேக்க தத்துவத்தைஅச்சொட்டாக பிரதியெடுத்தவர், அதிலும் பிழைகள் விட்டவர் என இப்னு ருஷ்தைவிமர்சிக்கிறார்.
மொரோக்கோவின் அரசியல் மற்றும் மார்க்க தலைவராக கருதப்படும் அல்லால் பாசி மற்றும்மெய்யியல் பேராசிரியர் அப்துல் அஸீஸ் லஹ்பாபி போன்றவர்கள் தாஹாவின் சிந்தனையைஆரம்ப கால கட்டங்களில் வடிவமைப்பதில் முதன்மையானவர்கள். ‘தாஹா அப்துர் ரஹ்மான்: பார்வைகளும் பரப்புக்களும்’ என்ற மாநாடு 2017ம் ஆண்டும் மலேசியா சர்வதேசபல்கலைக்கழகத்தில் நடாத்தப்பட்டமை அவரது சிந்தனைக்குக் கிடைத்த வரவேற்பையும்அங்கீகாரத்தையும் சுட்டிக் காட்டுகிறது. உலகின் செல்வாக்குச் செலுத்தும் 35 ஆளுமைகளில்ஒருவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது அவரது சிந்தனைக்குக் கிடைத்தஅங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.
தாஹா அப்துர் ரஹ்மான் ஒரு ‘சீர்திருத்தவாதி’யாகவும் இஸ்லாமிய பாரம்பரிய சிந்தனையைவிமர்சன ரீதியாக் மீள்வாசிப்பு செய்தவர் என்ற வகையில் ‘புத்தாக்க சிந்தனையாளர்’ ஆகவும்கருதப்படுகிறார். வரலாற்றில் தோன்றிய முஸ்லிம் தத்துவவியலாளர்கள் கிரேக்க தத்துவத்தைஅவ்வாறே தழுவிக் கொண்டவர்கள் என்ற விமர்சனத்தை தாஹா முன்வைக்கிறார். இப்னு ருஷ்த்அரிஸ்டோடிலை ‘பிரதியெடுத்தவர்’ என்கிறார். இமாம் கஸ்ஸாலியை தாஹா அப்துர் ரஹ்மான்புகழ்வது மெய்யியலை மறுத்ததன் காரணமாகவல்ல. மாற்றமாக, கஸ்ஸாலி மெய்யியலைஆழக் கற்று, பாண்டித்தியம் பெற்று அரபு- இஸ்லாமிய சிந்தனைக்கான தனித்துவமானபாதையொன்றை வரைந்து காட்டியவர் என்ற வகையிலேயே அவரை முன்னுதாரணமாகக்கொள்கிறார்.
பேராசிரியர் தாஹாவின் தத்துவார்த்த வேலைத்திட்டம் “விழுமியம்சார் உரையாடல்” எனலாம். இப்பின்னணியில்தான் ஆரம்ப கால முஸ்லிம் அறிஞர்கள் வெறுமனே சட்டங்களோடு தம்மைவரையறுத்துக் கொண்டனர், அச்சட்டங்களின் பின்னாலிருக்கும் விழுமியம்சார் தேடலைமேற்கொள்ளவில்லை என்ற விமர்சனத்தை முன்வைக்கிறார். மனிதன், ஆரம்பமாக, விழுமியங்களை தன்னகத்தே கொண்டதொரு படைப்பு. மனிதன், ஆரம்பமாக, அறிவுபெற்றவன், அல்லது அவனோர் அரசியல் பிரஜை என்ற கிரேக்க சிந்தனையுடன் தாஹாவின்கருத்து முரன்படுகிறது. விழுமியங்களின் மூலம் மதம் என்று வாதாடும் தாஹா, மனிதன்உருவாக்கிய சித்தார்ந்தங்கள் அல்லது மனித அறிவு விழுமியங்களின் மூலமாக இருக்கமுடியாது எனவும் கருதுகிறார். விழுமியங்கள் இன்றி மனிதனில்லை, மதம் இன்றி விழுமியங்கள்இல்லை, மதமின்றி மனிதம் இல்லை போன்றன அவரது பிரபல்யமிக்க கூற்றுக்கள்.
“இஃதிமானி மாதிரி”யை விழுமியம்சார் உரையாடலில் தாஹா அப்துர் ரஹ்மான் மையப்புள்ளியில் வைக்கிறார். பேராசிரியர் அதிகம் கவனம் குவித்த தர்க்கம், மொழியின் மெய்யியல், முதுசத்தை மீளாய்வு செய்தல், ஆன்மீக நவீனத்துவம்/ விழுமியம் சார் தத்துவம், அரசியல்சிந்தனை அல்லது அரசியல் தத்துவம் போன்ற பகுதிகளில் இஃதிமானி மாதிரியை பிரயோகித்திருக்கிறார்.
மேற்கத்தேய நவீனத்துவம் மீதான தாஹா அப்துர் ரஹ்மானின் விமர்சனம்
மேற்கத்தேய நவீனத்துவத்தை கண்மூடிப் பின்பற்றும் நிலையிலிருந்து விடுபடுவதாகஇருந்தால் புத்தாக்கமிக்க நவீனத்துவமொன்றை உருவாக்க வேண்டும். கால எல்லைக்குள்கட்டுண்டுச் செல்லாமல் பெறுமானங்கள் கொண்ட விரிந்ததொரு நவீனத்துவமொன்றைநோக்கி நகர வேண்டும். அதாவது, இன்றிருக்கும் நவீனத்துவத்தின் நடைமுறையிலிருந்துவிடுபட்டு, மானிட விழுமியங்களை அடித்தளமாகக் கொண்ட நவீனத்துவத்தின் ஆன்மாநோக்கி நகர வேண்டும். நவீனத்துவத்தின் ஆன்மா என்பது மூன்று பகுதிகளைக் கொண்டது:
- நேரிய வழியைத் தேடல்: அதன் கருத்து, எம்முடைய சிந்தனையில் அடுத்தவர் ஆதிக்கம்செலுத்தாது பாதுகாத்தல் எனலாம். பலவீனத்திலிருந்து விடுபடுவதற்கான முதல் நிபந்தனைஇது. கண்மூடிப் பின்பற்றுதலுக்கு நேர் எதிரானது. கண்மூடிப் பின்பற்றுவதனூடாக நேரியவழியை ஒருபோதும் அடைந்து கொள்ள முடியாது.
- விமர்சனம்: இங்கு நாம் ‘அறிவு’ என்று குறிப்பிடாமல் ‘விமர்சனம்’ என்று குறிப்பிடுகிறோம். விமர்சனத்துக்கான மூலாதாரம் ‘மனித அறிவு’ என்ற நிலையிலிருந்து ‘இறை வசனம்’ எனும்விரிவானதொரு நிலை நோக்கி நகர்கிறோம். விமர்சன சிந்தனை இறை வழிகாட்டல் மீதானமனித அறிவின் பிரயோகம் என்ற நிலையிலிருந்து ஆரம்பிக்கிறது. மனிதன் ஆரம்பமாகதன்னை விமர்சிக்கிறான். பின், அடுத்த மனிதர்களை விமர்சன நீதியாக அணுகுகிறான். தன்னை சூழ்ந்திருக்கும் பொருட்கள், நிகழ்வுகள் நோக்கி அது விரிவடைகிறது.
- முழுமைத்தன்மை/ சர்வதேசத்தன்மை: நவீனத்துவம் சில சமூகங்களோடு அல்லது சிலதுறைகளோடு சுருங்கிக் கொள்ளாது. மாற்றாமாக, அது அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கியது. எல்லாத் துறைகளையும் கருத்திற் கொண்டது.
இம்மூன்று பகுதிகளையும் விரிவாக விளக்குவது சாத்தியமற்றது. இரண்டாம் பகுதியான’விமர்சனம்’ எனும் பகுதியை இங்கு ஓரளவு விரிவாக விளக்கலாம். விமர்சனம் எனும் போது சிலமுஸ்லிம் அறிஞர்கள் இஸ்லாமிய முதுசங்களை விமர்சிக்கின்றனர். இஸ்லாமிய முதுசங்கள்மீதான நவீனத்துவ வாசிப்பு அவசியம் என அவர்கள் வாதாடுகின்றனர். முதன்மை முதுசமான’அல்குர்ஆன்’ மீது அவர்கள் முன்வைக்கும் உரையாடல்களில் எமக்கு பல விமர்சனங்கள்இருக்கின்றன. புதியதொரு நவீனத்துவத்தில் நுழைய ஆரம்பகால மூலாதாரங்களைகைவிடவேண்டியதில்லை, கைவிடக் கூடாது. மாற்றமாக, அம்மூலாதாரங்களை பயன்படுத்தும்விதத்தில் புதிய மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். முன்னோர் உருவாக்காத கலைகளாகக்கூட அது இருக்கலாம். அவர்கள் உருவாக்கிய கலைகளுக்கு மேலதிகமானவையாக இவைஇருக்கும்.
முதன்மை மூலாதாரமான அல்குர்ஆன் மீது நவீனத்துவ வாசிப்பொன்றை பிரயோகிப்பதனூடாகநாம் பிரேரிக்கும் புதிய நவீனத்துவத்தினுள் நுழைய முடியும். நவீனத்துவ வாசிப்பு ஏற்கனவேஇருந்த ஒன்றை பிரதி செய்வதாக இல்லாமல், புத்தாக்கமாக இருக்க வேண்டும். நவீனகாலத்தில் சில முஸ்லிம் அறிஞர்கள் தமது வாசிப்பை நவீனத்துவ வாசிப்பு என்றுகூறிக்கொள்வதை ஏற்க முடியாது. தவ்ராத், இன்ஜீல் வேதங்களை அது சார்ந்த அறிஞர்கள்வாசித்தது போல இவர்கள் அல்குர்ஆனை வாசிக்க முனைகின்றனர். அல்குர்ஆன் மீதானஇவர்களது வாசிப்புக்களை மூன்று வகைக்குள் அடக்க முடியும். இம்மூன்று வகையும்மார்க்கத்தை தூரப்படுத்தல் அல்லது துருவப்படுத்தல் அல்லது துண்டித்தல் நிலைக்குத்தள்ளிவிடுவதை இலக்காகக் கொண்டுள்ளன:
- மனித நிலைப்படுத்தல்: அல்குர்ஆன் வசனங்களை இறை அந்தஸ்த்திலிருந்து மனிததர்த்திற்கு கீழிறக்கிவிடல் எனலாம். மனித நிலைப்படுத்தல் வாசிப்புக்களினூடாக இறைவார்த்தைகளுக்கிருக்கும் புனிதத்தன்மையை அழித்துவிடல் நாடப்படுகிறது.
- அறிவு நிலைப்படுத்தல்: இன்றைய உலகில் இருக்கும் அறிவையும் அதன் சாதனங்களையும்மையப்படுத்திய இவ்வகை வாசிப்பு மறையுலகையும் அதன் தத்துவத்துவத்தையும்ஓரப்படுத்துகிறது. கற்புலனற்ற வாழ்வு, படைப்பினங்கள் மீதான நம்பிக்கையைஇல்லாதொழிக்கும் வாசிப்பு இது.
- வரலாற்று நிலைப்படுத்தல்: அல்குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் குறிப்பிட்டசூழலோடு மாத்திரம் உரையாடக் கூடியதாக விளக்குதலே இவ்வாசிப்பு முறையாகும். இறைத்தூதர் காலம் தவிர்ந்த ஏனைய காலங்களுக்கு, குறிப்பாக இன்றைய நவீன உலகுக்கு, இறைவழிகாட்டல் பொருத்தமற்றது என்பதை விவாதிப்பதே இவ்வாசிப்பின் பிரதானபேசுபொருள்.
கிறிஸ்தவ உலகில் மேற்கத்தேய நவீனத்துவம் தமது புனித வேதங்களுடன் இவ்வகையானவாசிப்புக்களையே மேற்கொன்டன. வேதங்களது புனிதத்துவத்தை இல்லாமலாக்கும்இவ்வகை வாசிப்புக்களையே சில முஸ்லிம் அறிஞர்களும் அல்குர்ஆனில் பிரயோகிக்கமுனைகின்றனர். இது கண்மூடி பின்பற்றும் நிலையாகும். இது விமர்சன சிந்தனையுமல்ல, புத்தாக்க சிந்தனையுமல்ல.