இன்றைய உலக ஒழுங்கு பன்மைத்துவ மத, இன  கட்டமைப்பைக் கொண்டுள்ளது. மூன்றாம் உலக நாடுகளில் மட்டுமல்லாது வளர்ச்சியடைந்த நாடுகளிலும் இவ்வுண்மையை அவதானிக்கலாம். நாடுகளது அபிவருத்திக்கும் வளர்ச்சிக்கும் நேர்மறையாக பயன்படுத்தப்பட வேண்டிய இப்பன்மைத்துவ கட்டமைப்பு இன்று அதிகார வர்க்கத்திரனால் தனது நலனை ஈட்டிக்கொள்வதற்காக மாத்திரம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு எதிர்மறையாக பயன்படுத்தப்படுகிறது.  இனவாதமும் இனவன்முறையும் இனத்துவேசமும் மிகக் கச்சிதமாக அரங்கேற்றப்படுகின்றன. இவ்வகை சிக்கலுக்கு தீர்வு தேட ஒரு முஸ்லிம் எவ்வாறு தனது முன்மாதிரியான இறைத்தூதரது (ஸல்) வாழ்வை மீள்வாசிக்க முடியும் என்ற கேள்விக்கு விடை காணை இவ்வாய்வு முனைகிறது. 

இரண்டாம் நிலைத் தரவுகளை மையப்படுத்தி இவ்வாய்வு வரையப்பட்டது. இறைத்தூதர் தனக்கு அதிகாரம் கிடைக்காத் போதும் அதிகாரம் வாயத்த போதும் சமூகங்களுக்கிடையில் பிளவுகளையோ பிரச்சினைகளையோ ஏற்படுத்தாது அவற்றுக்கு மத்தியில் நல்லுறவை கட்டியெலுப்புவதில் முனைப்புடன் செயற்பட்டார்கள் என்பதுடன் சமூகங்களுக்கு மத்தியில் நல்லுறவை கட்டியெலுப்புவதற்கான அடிப்படை விதிகளையும் முன்வைத்தார் என ஆய்வின் முடிவு கூறுகிறது. அவர் முன்வைத்த அவ்வடிப்படை விதிகளை இலங்கை போன்றதொரு பன்மைத்துவ சமூக ஒழுங்கில் எவ்வாறு பிரயோகிக்கலாம் என்பதையும் இவ்வாய்வு ஆலோசனையாக முன்வைக்கிறது.

Share.

Comments are closed.